கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த சர்க்கார்பதி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சங்கர். கடந்த சில தினங்களுக்கு முன்னர், இவரது தோட்டத்தில் புகுந்த புலி, மாட்டுக் கொட்டகையில் கட்டிவைத்திருந்த நான்கு ஆடுகள், ஒரு கன்று குட்டியை கடித்துக் கொன்றது.
இது குறித்து தகவலறிந்த வனத் துறையினர், சம்பந்தப்பட்ட பகுதியில் விசாரணை நடத்தி கண்காணிப்பு கேமரா பொருத்தினர்.
தொடர்ந்து அப்பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதை உறுதிப்படுத்திய வனத் துறையினர், அவற்றைப் பிடிக்க இரும்புக் கூண்டை வைத்தனர். கூண்டில் இறைச்சியை வைத்து தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர். ஆடுகளைக் கொன்றுவரும் புலி பிடிபட்டதும் வனத் துறையில் விடுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கூண்டு வைக்கப்பட்ட பகுதியை வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி பார்வையிட்டார்.
இதையும் படிங்க:
'குற்றவாளிகளின் வழக்கறிஞர் எனக்கு சவால் விடுத்தார்' - நிர்பயாவின் தாய் கண்ணீர்