கோவை பீளமேடு சாலையில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி கல்லூரி மத்திய அரசின் ஜவுளித் துறையின்கீழ் இயங்கிவருகிறது. இந்தக் கல்லூரி அடுத்த கல்வியாண்டு முதல் ஜவுளி ஆராய்ச்சி மையமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இது குறித்து கல்லூரி மாணவர்கள் பேசுகையில், இந்தக் கல்லூரி, ஆராய்ச்சி மையமாக மாற்றப்பட்டால் பயிலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்றும், எதிர்கால வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
எனவே ஜவுளி ஆராய்ச்சி மையமாக மாற்றக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர். மேலும் உயர் அலுவலர்கள் தங்களை அழைத்துப் பேச வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்தனர்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டம்: பலூன் பறக்கவிட்டுப் போராட்டம்