ETV Bharat / state

கூட்டணியில் 234 தொகுதிகளையும் எதிர்பார்க்கிறோம் - சரத்குமார் - கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோயம்புத்தூர்: கூட்டணியில் 234 தொகுதிகளையும் எதிர்பார்க்கிறோம் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சரத்குமார் பேட்டி
சரத்குமார் பேட்டி
author img

By

Published : Feb 2, 2021, 9:04 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம் செல்வபுரம் தனியார் மண்டபத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கொங்கு தெற்கு மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் சரத்குமார், மகளிரணி மாநிலப் பொதுச்செயலாளர் ராதிகா ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது கூட்டத்தில் சரத்குமார் பேசியதாவது, "இம்முறை 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறோம். நாங்கள் இனி ஒரு சீட்டுக்கும் இரண்டு சீட்டுக்கும் போட்டியிட மாட்டோம். அதே சமயம் நாங்கள் அதிமுகவில் இதுவரை கூட்டணியில்தான் உள்ளோம். தேர்தலின்போது ஓட்டுக்காக நமது தொண்டர்கள் யாரும் பணத்தை வாங்கிவிட வேண்டாம்.

சரத்குமார் பேட்டி

கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கப் பணியை விரைந்து நிறைவேற்ற வேண்டும். நொய்யல் ஆறு சீரமைக்க ரூ. 230 கோடி ஒதுக்கி பணிகள் நடைபெற்றுவருகிறது. அவிநாசி ரோடு மேம்பாலத் திட்டத்திற்கு ரூ.1,650 கோடி ஒதுக்கிய அரசுக்கு நன்றி. இதனை நீலாம்பூர் ஆறு வழிச்சாலையில் இணைத்துத் தர வேண்டும்" எனப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "கூட்டணியில் 234 தொகுதிகளையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். கூட்டணி பேச்சுவார்த்தைக்குப் பிறகு எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை நாங்கள் அறிவிப்போம். சசிகலாவின் வருகை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது தெரியாது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை பயனளிக்குமா? என்பதற்கு காலம்தான் பதிலளிக்க வேண்டும். அதேசமயம் அதிமுக கூட்டணியில் தனிச் சின்னத்தில்தான் போட்டியிட இருக்கிறோம்" என்றார்.

இதையும் படிங்க: மனுக்களை ஸ்டாலின் பெறுவதே... குப்பையில் வீசத் தான் - தேமுதிக சுதீஷ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.