ETV Bharat / state

தூய்மை பணியாளர்களை துன்புறுத்தும் கோவை மாநகராட்சி? வைரலாகும் வீடியோவால் சர்ச்சை! - சாக்கடையில் இறங்கிய தூய்மை பணியாளர்கள் வீடியோ

கோவை ரயில் நிலையம் எதிரே தூய்மை பணியாளர்கள் உரிய உபகரணங்கள் இன்றி சாக்கடையை சுத்தம் செய்ததை பொதுமக்களில் ஒருவர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்

உபகரணங்கள் இன்றி சாக்கடையை சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்கள்

author img

By

Published : Feb 10, 2023, 7:51 AM IST

Updated : Feb 10, 2023, 10:39 AM IST

கோவை: உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சாக்கடையை சுத்தம் செய்வது மற்றும் மலக்குழிகளுக்குள் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே அரசு சட்ட விதிகளுக்கு உட்பட்டு சாக்கடை மற்றும் மலக்குழிகளுக்குள் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சாக்கடை சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்கள்

இந்நிலையில், கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள சாக்கடையில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தூய்மை பணியாளர்கள் இறங்கி சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது. ரயில் நிலையம் வழியே சென்ற பொதுமக்களில் ஒருவர், "ஏன் சாக்கடை குழிக்குள் இறங்கி சுத்தம் செய்கிறீர்கள், யார் உங்களை இந்த பணிகளுக்கு பயன்படுத்தியது" என கேள்வி எழுப்புவது வீடியோவில் பதிவாகி உள்ளது.

அப்போது சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் இருந்த தொழிலாளி "கவுன்சிலர் மற்றும் ஏ.இ சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்ய சொன்னார்கள்" என தெரிவித்துள்ளார். இதனை அந்த நபர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.

இது போன்ற வேலைகளில் தூய்மை பணியாளர்களை உட்படுத்தும் போது, சாக்கடைகளுக்குள் இறங்காமல் சுத்தம் செய்கின்ற உபகரணங்களை மாநகராட்சி அதிகாரிகள் வழங்க வேண்டும் எனவும், இனி இது போன்று நடைபெறாமல் இருக்கும் வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களின்றி பணி செய்த விவகாரத்தில் மாநகராட்சி மேயர், ஆணையர் உள்ளிட்டோருக்கு மனித உரிமைகள் ஆணையம் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், தற்போது கோவை மாநகராட்சியில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது.

இதையும் படிங்க: எலிக்கு வைத்த பொறியில் சிக்கிய மரநாய்.. வனத்துறையிடம் ஒப்படைப்பு!

Last Updated : Feb 10, 2023, 10:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.