ETV Bharat / state

தீபாவளி போனஸ் கொடுக்காததால் ஆத்திரம்; கடை முன் குப்பையை கொட்டிய சுகாதாரப் பணியாளர் - ராமச்சந்திரா சாலை

கோவையில் தீபாவளி போனஸ் தராத கடைகள் முன்பு சுகாதாரப்பணியாளர்கள் குப்பை கொட்டுவது வாடிக்கையாகி வருகிறது.

கடை முன் குப்பையை கொட்டிய சுகாதார பணியாளர்

author img

By

Published : Oct 12, 2022, 12:58 PM IST

கோவை: கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர், ஜேம்ஸ். இவர் கோவை ஆர்.எஸ். புரம், ராமச்சந்திரா சாலையில் எல்இடி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரிடம், கடந்த 4ஆம் தேதி சுகாதாரப் பணியாளர் ஒருவர் தீபாவளி போனஸ் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஒரு வாரம் கழித்து வருமாறு கூறியுள்ளார்.

அப்பணியாளர் 500 ரூபாய் கேட்டு தொந்தரவு செய்யவே, இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி சுகாதார பணியாளர் ஒருவர் கடை அருகே இருந்த குப்பையை எடுத்து, ஜேம்ஸ் கடை முன்பு போடும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தீபாவளி போனஸ் கொடுக்காததால் ஆத்திரம்; கடை முன் குப்பையை கொட்டிய சுகாதாரப் பணியாளர்

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் சில இடங்களில் பணம் கேட்டு, கொடுக்காத கடைகள் முன்பு, சுகாதாரப்பணியாளர் சிலர் குப்பையை கொட்டிச்செல்வது வாடிக்கையாக இருப்பதாக வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். வலுக்கட்டாயமாக, வியாபாரிகளிடம் தீபாவளி பணம் கேட்கும் ஊழியர்கள் சிலர் மீது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் குவிந்து கிடக்கும் குப்பை - நோயளிகள் கடும் அவதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.