ETV Bharat / state

கோவை வனப்பகுதிக்குள் சந்தன மரங்கள் கடத்தல்!

கோவை:  வனப் பகுதிக்குள் அடையாளம் தெரியாத நபர்கள் சந்தன மரங்களை வெட்டி கடத்தி இருப்பது  வனத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

sandalwood theft
author img

By

Published : Nov 8, 2019, 12:07 AM IST

கோவை மாவட்டம் ஆலந்துறை அடுத்த பூண்டி மலைப்பகுதியில் போளுவாம்பட்டி வனச்சரகம் அமைந்துள்ளது. இந்த போளுவம்பட்டி வனச்சரகத்தில் ஏராளமான சந்தன மரங்கள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதிக்குள் உள்ள இந்த சந்தன மரங்களை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி உள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போளுவம்பட்டி வனத்துறையினர் தாணிகண்டி மலைக்கிராமம் அருகே வனப்பகுதியில் துப்பாக்கிகளுடன் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதிக்குள் இருந்த மூன்றுக்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் வேரோடு வெட்டி கடத்தப்பட்டது தெரிய வந்தது.

கோவை வனப் பகுதிக்குள் சந்தன மரங்கள் கடத்தல்

இதனையடுத்து அங்கு சிதறியிருந்த கட்டைகளை சேகரித்த வனத்துறையினர் போளுவம்பட்டி வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். வெட்டப்பட்ட சந்தன மரங்களின் மதிப்பு ஒரு லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து சந்தன மரம் வெட்டியவர்களைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:

பண மோசடி செய்த சிட்பண்ட் நிறுவனத்தை முற்றுகையிட்ட முதலீட்டாளர்கள்!

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.