கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகேவுள்ள மன்னுரைச் சேர்ந்தவர் விவசாயி ஈஸ்வரசாமி. இவர், பொள்ளாச்சியிலுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் விவசாயக் கடன் வாங்கியுள்ளார். இதனால், கடன் தொகையை செலுத்துவதற்காக இன்று (ஏப்.25) தனது உறவினருடன் காரில் சென்றுள்ளார்.
பின்னர், கடன் தொகையை செலுத்திவிட்டு மீண்டும் வங்கியில் பணம் பெற்றுக்கொண்டு வந்துள்ளார். தொடர்ந்து, அவர்கள் பொள்ளாச்சி - கோவை சாலையிலுள்ள ஹோட்டலில் உணவருந்துவதற்காக சென்றனர். முன்னதாக அவர்களது காரை பார்க்கிங்-ல் நிறுத்துவிட்டு சென்றனர்.
இருவரும் உணவு அருந்திவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு, காரில் இருந்த 3 லட்சம் ரூபாய் பணம் திருடுபோகியுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஈஸ்வரசாமி உடனடியாக மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று அங்கு பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சாவகசமாக நகைப் பெட்டியை திருடி செல்லும் திருடர்கள்...