ETV Bharat / state

பூண்டு மண்டியில் கொள்ளை.. தடயங்களை அழிக்க வைத்த நெருப்பு - சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர்! - CCTV videos

கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் பூண்டு மண்டியில் கொள்ளையடிக்கச் சென்ற நபர், தடயங்களை அழிக்க நெருப்பு வைத்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூண்டு மண்டியில் கொள்ளை.. தடயங்களை அழிக்க வைத்த நெருப்பு - சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர்!

author img

By

Published : Jul 22, 2022, 5:49 PM IST

கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள ஜடையம்பாளையம் அருகே மொத்த ஏல காய்கறி மண்டி செயல்பட்டு வருகிறது. இங்கு முகமது சபிக் என்பவர் பூண்டு மண்டி நடத்தி வருகிறார். இவர் நேற்றிரவு வழக்கம்போல் பணிகளை முடித்து விட்டு, கடையை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இதனையடுத்து நள்ளிரவு இவரது மண்டியின் மேற்கூரையை பிரித்து உள்ளே நுழைந்த முகமூடி அணிந்த மர்ப நபர் ஒருவர், மண்டி அலுவலகத்தில் வைத்திருந்த சுமார் இரண்டு லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்துள்ளார். அது மட்டுமில்லாமல், கொள்ளையடிக்கபட்ட தடயங்களை மறைப்பதற்காக மண்டி அலுவலகத்திற்கும் தீ வைத்துள்ளார்.

பூண்டு மண்டியில் கொள்ளை.. தடயங்களை அழிக்க வைத்த நெருப்பு - சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர்!

இந்த விபத்தில் மண்டி அலுவலகத்தில் வைத்திருந்த சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள், கணினி, மடிக்கணினி உள்ளிட்டவையும் எரிந்தது. பின்னர் இன்று வழக்கம் போல் மண்டியை திறந்து பார்த்த போது, இந்த திருட்டு சம்பவம் நடந்தது குறித்து தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து மண்டி உரிமையாளர் முகமது சபிக், நடந்த சம்பவம் குறித்து சிறுமுகை காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ’தலையை வெட்டி காவல் நிலையத்திற்கு கொண்டு வருவேன்’ - மிரட்டிய இளைஞர் வீடியோ வைரல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.