ETV Bharat / state

கோவையில் பிளிப்கார்ட் குடோனில் அடையாளம் தெரியாத நபர்கள் கைவரிசை! - அன்னூர் மேட்டுப்பாளையம்

கோயம்புத்தூரில் ஆன்லைன் பொருட்களை டெலிவரி செய்யும் குடோனில் நள்ளிரவில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் பல லட்ச ரூபாய் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்துச்சென்றனர்.

கோவையில் பிளிப்கார்ட் குடோனில் மர்ம நபர்கள் கைவரிசை

author img

By

Published : Jul 26, 2022, 3:33 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சிட்டி யூனியன் வங்கிக்குப் பின்புறம் பிளிப்கார்ட் டெலிவரி பாய்ண்ட் குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது.

அன்னூர் சுற்றுவட்டாரத்தில் பிளிப்கார்ட் வெப்சைட்டில் ஆர்டர் செய்யப்படும் பொருட்கள் இந்த குடோனுக்கு வந்த பிறகே வாடிக்கையாளர்களின் முகவரிக்கு டெலிவரி செய்யப்படும். இந்த நிலையில் நேற்று இரவு குடோனில் ஊழியர்கள் வழக்கம் போல பொருட்களைச் சரி பார்த்து விட்டு குடோனை பூட்டிச் சென்றனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டுக் கடை திறந்திருப்பதாக மேலாளருக்குத் தகவல் சென்றது. அதிர்ச்சியடைந்த மேலாளர், குடோனை ஆய்வுசெய்தபோது நள்ளிரவில் குடோனின் ஷட்டரை உடைத்து கல்லாப்பெட்டியில் இருந்த டெலிவரி கலெக்சன் பணம், விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் சிசிடிவி ஹார்ட் டிஸ்க்குகள் உள்ளிட்டவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச்சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து மேலாளர் அளித்தப்புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அன்னூர் காவல்துறையினர் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் கைரேகைகளைப் பதிவு செய்தனர். மேலும் இந்தச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களைத்தேடி வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் மதிப்பு சுமார் 8 லட்சம் ரூபாய் இருக்கும் எனக்கூறப்படுகிறது.

அன்னூர் சுற்றுவட்டாரத்தில் கடந்த ஒரு ஆண்டாகத் தொடர் கொள்ளைச்சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் பிளிப்கார்ட் டெலிவரி குடோனில் அடையாளம் தெரியாத நபர்கள் கைவரிசையைக் காட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: விழுப்புரம் மாணவி உயர் சிகிச்சைக்காக சென்னைக்கு மாற்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.