ETV Bharat / state

சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி - 31st Road Safety Week

கோவை: சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு கோவை மத்திய போக்குவரத்து அலுவலகத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

rally
rally
author img

By

Published : Jan 20, 2020, 2:52 PM IST

31ஆவது சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு கோவை மத்திய போக்குவரத்து அலுவலகத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, கோவை மாவட்ட காவல் ஆணையர் சுமித் சரண் ஆகியோர் கொடியசைத்து தொடக்கிவைத்தனர்.

சாலை பாதுகாப்பு வாரமானது இன்று முதல் தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெறும். இன்று நடந்த விழிப்புணர்வு பேரணியில் 600க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சாலை பாதுகாப்பு, போக்குவரத்து பாதுகாப்பு வாசகங்கள் உள்ள பதாகைகளை ஏந்தியும், தலை கவசம் அணிந்தும் இந்தப் பேரணியில் அவர்கள் பங்கேற்றனர்.

சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ராசாமணி, ”கோவை மாவட்டம் முழுவதும் சாலை பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை அபராதங்கள் அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்புக் கூட்டம் நடைபெறும். விதிமுறைகளை மீறிச் செல்லும் தனியார் வாகனங்கள் அனைத்திற்கும் அபராதம் விதித்தும் அவர்களது ஓட்டுநர் உரிமைத்தை ரத்துசெய்யவும் அந்தந்த சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.

இதையும் படிங்க: வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவான சாலை பாதுகாப்பு வார விழா?

Intro:சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி.

Body:31வது சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு கோவை மத்திய போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு ராசாமணி மற்றும் கோவை மாவட்ட காவல் ஆணையர் சுமித் சரண் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இந்த சாலை பாதுக்காப்பு வாரமானது இன்று முதல் தொடங்கி 27ம் தேதி வரை நடக்கிறது. இன்று நடந்த இந்த பேரணியில் 600க்கும் மேற்பட்ட வாகனங்கள் பங்கேற்றனர். வாகனத்தை ஓட்டியவர்கள் தங்கள் வாகனத்தில் சாலை பாதுகாப்பு, போக்குவரத்து பாதுகாப்பு வாசகங்கள் உள்ள பதாகைகளை வைத்தவாறும் அனைவரும் தலை கவசம் அணிந்த வாறும் இந்த பேரணியில் கலந்துகொண்டனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி இந்த சாலை பாதுகாப்பு வாரம் ஆனது இன்று முதல் தொடங்கி இந்த வாரம் முழுவதும் நடைபெறுகின்ற தெரிவித்தார். முதல் நாளான இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது என்று வாக்கத்தான் நிகழ்ச்சி நாளை மறுநாள் மருத்துவ முகாம்கள் என இந்த வாரம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவித்தார். மேலும் கோவை மாவட்டம் முழுவதும் சாலை பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மற்றும் அபராதங்கள் அளிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு விதிமீறல்கள் இருப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார். மேலும் விதிமுறைகளை மீறி செல்லும் தனியார் வாகனங்கள் அனைத்திற்கும் அபராதம் விதித்தும் அவர்களது லைசன்சை ரத்து செய்யவும் அந்தந்த சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.