பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் முன்பு 31ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் மேற்கு காவல் நிலைய காவலர்கள் இணைந்து சாலைப் பாதுகாப்பு நாடகம் நடத்தினர்.
ஹெல்மெட் அணிதல், குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது, இருசக்கர வாகனத்தில் மூன்றுபேர் செல்லக்கூடாது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி நிகழ்த்தப்பட்ட இந்நாடகம் பொதுமக்களை அதிர்ச்சியில் உறையவைத்தது. இதனைப் பார்த்த அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் சிலர், இது உண்மையென நம்பி காவல் துறை, ஆம்புலன்ஸுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர்.
மேலும், முதலில் சிலர் உதவி செய்வதற்காக முன் வந்ததும், பின்னர் இது விழிப்புணர்வு நாடகம் என்பதை உணர்ந்ததும் நிகழ்ந்தது. இந்த நாடகம் மூலம் தலைகவசம் அணிவதன் அவசியத்தை தாங்கள் அதிகமாக உணர்ந்ததுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துச்சென்றனர்.
இதையும் படிங்க: உயிரை பணயம் வைத்து மற்றொருவரின் உயிரை காப்பாற்றிய போலீஸ்