பொள்ளாச்சி, ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச்சரகத்தில் சின்னார் பதி மலைவாழ் மக்கள் குடியிருப்பு உள்ளது. சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட சூறாவளிக் காற்றின் காரணமாக எடடு குடியிருப்புகள் இங்கு சேதமடைந்தன.
இதையடுத்து, அஇஅதிமுக வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் அமுல் கந்தசாமி இங்கு நேரில் சென்று ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார். மேலும், சின்னார் பகுதியில் வசிக்கும் 45 மலைவாழ் மக்களின் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார்.
தொடர்ந்து அவர்களிடம் பேசிய அமுல் கந்தசாமி, தற்பொழுது கரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருவதால், அனைவரையும் பாதுகாப்புடன் இருக்குமாறுஅறிவுரை வழங்கினர். இந்த நிகழ்வில் கோட்டூர்நகர செயலர் பாலு, ஆனைமலை ஒன்றிய செயலர்கள் மா.சுந்தரம், அப்புசாமி கார்த்திகேயன், கட்சிப் பிரமுகர்கள், வனத்துறையினர் எனப் பலரும் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: இருபதாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கிய மூதாட்டி!