ETV Bharat / state

தனியார் ஆலையில் 510 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - ஆலைக்குச் சீல் வைப்பு! - ration shop coimbatore

கோவை: சட்டவிரோதமாக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 510 கிலோ ரேசன் அரிசி, 210 கிலோ அரிசி மாவை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர் அரவை ஆலைக்கு சீல் வைத்தனர்.

kovai
author img

By

Published : Oct 13, 2019, 5:41 PM IST

கோவை செல்வபுரம் பகுதி சோழன் நகரில் தனியாருக்குச் சொந்தமான அரவை ஆலை இயங்கி வருகிறது. இந்த அரவை ஆலையில் சட்டத்திற்குப் புறம்பாக ரேஷன் அரிசியை பதுக்கி மாவாக அரைத்து விற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவின் பேரில், செல்வபுரம் பகுதிக்குச் சென்ற மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன், தனி வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் பறக்கும் படையினர் ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ஆலையில் 510 கிலோ ரேஷன் அரிசி, 210 கிலோ அரிசி மாவு பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ரேஷன் அரிசி, கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சட்ட விரோதமாக செயல்பட்ட ஆலைக்கு அலுவலர்கள் சீல் வைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள்

வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்த அரிசி, இருசக்கர வாகனம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கிடங்கில் வைத்தனர். மேலும் அலுவலர்கள் வருவதை அறிந்து தலைமறைவான ஆலை உரிமையாளரைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: மூன்று டன் கடத்தல் ரேஷன் அரிசி, தொடர் சேஸிங் - மடக்கிப்பிடித்த அரசு அலுவலர்கள்!

Intro:கோவையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 510 கிலோ ரேசன் அரிசி, 210 கிலோ அரிசி மாவை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர் அரவை ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.Body:கோவை செல்வபுரம் பகுதி சோழன் நகரில் இயங்கு வரும் தனியாருக்கு சொந்தமான அரவை ஆலையில் ரேசன் அரிசி பதுக்கி , அரைக்கப்பட்டு விற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைக்க பெற்றது. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவின் பேரில் செல்வபுரம் பகுதிக்குச் சென்ற மாவட்ட வழங்கல் அதிகாரி குமரேசன் மற்றும் தனி வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் பறக்கும் படையினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் அந்த ஆலையில் 510 கிலோ ரேசன் அரிசி, 210 கிலோ அரிசி மாவு பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.இதனையடுத்து ரேசன் அரிசி மற்றும் அரிசி கடத்துவதுவதற்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதனைத்தொடர்ந்து சட்ட விரோதமாக செயல்பட்ட ஆலைக்கு சீல் வைத்த வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்யபட்ட அரிசி மற்றும் வாகனம் ஆகியவற்றை மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கிடங்கில் வைத்தனர்.மேலும் அதிகாரிகள் வருவதை அறிந்து தலைமறைவான ஆலை உரிமையாளரை வருவாய்த்துறையினர் தேடி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.