ETV Bharat / state

பெரும் பரபரப்புகளுக்கிடையே அன்னூர் பேரூராட்சி தலைவர் தேர்வு!

அன்னூர் பேரூராட்சி தலைவருக்கு நடைபெற்ற மறைமுக தேர்தலில் திமுகாவைச் சேர்ந்த பரமேஸ்வரன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அன்னூர் பேரூராட்சி மறைமுக தேர்தல்
அன்னூர் பேரூராட்சி மறைமுக தேர்தல்
author img

By

Published : Mar 26, 2022, 6:48 PM IST

கோயம்புத்தூர்: நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சியில் திமுக 7 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 வார்டுகளிலும், காங்கிரஸ் மற்றும் பாஜக தலா 1 வார்டிலும், சுயேச்சைகள் 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.

இதையடுத்து கடந்த மார்ச் 4ஆம் தேதி நடைபெற்ற பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தலில் திமுக தலைமைக்கழகம் அறிவித்த வேட்பாளர் விஜயகுமாருக்கும், அதே கட்சியைச் சேர்ந்த திமுக நகர பொறுப்பாளர் பரமேஸ்வரன் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் வாக்குச்சீட்டுகள் கிழிக்கப்பட்டன. பேரூராட்சி அலுவலகம் சூறையாடப்பட்டது. இதையடுத்து அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் இன்று (மார்ச் 26) காலை நடைபெற்றது. பேரூராட்சி அலுவலகத்தை சுற்றி தகர சீட்டுகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு, 200 மீட்டர் தொலைவுக்கு பொதுமக்கள் வெளியில் நிறுத்தப்பட்டனர். கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் சுஹாசினி தலைமையில் 150 காவலர்கள், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அன்னூர் பேரூராட்சி மறைமுக தேர்தல்

போட்டியின்றி தேர்வு

தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் தொடங்கிய நிலையில் திமுக நகர பொறுப்பாளர் பரமேஸ்வரன் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் பரமேஸ்வரன் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார். பரமேஸ்வரன், அன்னூர் பேரூராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

அன்னூர் பேரூராட்சி மறைமுக தேர்தல்
அன்னூர் பேரூராட்சி மறைமுக தேர்தல்

அன்னூர் பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பரமேஸ்வரனுக்கு கட்சியினர் மாலை அணிவித்து, பட்டாசுகளை வெடித்து, மேள தாளங்கள் முழங்க பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து அவினாசி சாலை வரை ஊர்வலமாக அழைத்துச்சென்று கொண்டாடினர்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த பரமேஸ்வரன் அன்னூர் பேரூராட்சியில் குடிநீர், கழிவு நீர் மற்றும் சாலை வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மறைமுக தேர்தலில் திமுக- அதிமுக இடையே மோதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.