உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருக்கும் வாய்க்கால் வழியே பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்கிறது. இப்பொழுது அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாத நிலையில் பொதுப்பணித் துறை சார்பாக வாய்க்காலில் ஏற்பட்டிருந்த பழுதுகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், இன்னும் பல பகுதிகளில் வாய்க்காலின் கரைகள் உடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடும்பொழுது உடைந்திருக்கும் கரையில் இருந்து தண்ணீரில் மணல் அடித்து செல்லும் அபாயம் உள்ளதோடு மட்டுமில்லாமல் வாய்க்காலின் கரையோரமாக இருக்கும் சாலை பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. எனவே வாய்க்காலில் ஏற்பட்டிருக்கும் பழுதுகளை சரி செய்யும் பணிகளை தீவீரப்படுத்தினால் மட்டுமே இந்த அபாயம் தீரும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.