ETV Bharat / state

ரெம்டெசிவிர் மருந்து விற்பனை திடீர் நிறுத்தம்  - பொதுமக்கள் சாலை மறியல்! - ublic road blockade

ரெம்டெசிவிர் மருந்து இன்று முதல் விற்பனையாகாது என்று அறிவிக்கப்பட்டதால், மருந்து வாங்குவதற்காக வந்திருந்த பொதுமக்கள் சிலர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ரெம்டெசிவர் மருந்து விற்பனை நிறுத்தப்பட்டது  -  பொதுமக்கள் சாலை மறியல்!!

author img

By

Published : May 17, 2021, 3:34 PM IST

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பல தனியார் மருத்துவமனைகள் ரெம்டெசிவிர் என்ற மருந்தை பரிந்துரை செய்து வெளியே வாங்கி வர கூறியுள்ளனர். ரெம்டெசிவிர் மருந்து ஐந்து மாவட்ட மையங்களில் மட்டும் கிடைக்கிறது. இந்த மையங்களில் மக்களின் கூட்டம் அலைமோதியது.

இதனால், நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நேற்று (மே.16) தமிழ்நாடு முதலமைச்சர் மருந்து நேரடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படாது என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். இதையடுத்து, இன்று (மே.17) முதல் விற்பனை மையங்களில் மருந்துகள் விற்பனை என்பது நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், கோயம்புத்தூர் - அவினாசி சாலையில் உள்ள கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரியில் மே 8ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட்டு வந்த ரெம்டெசிவிர் மருந்து இன்று முதல் விற்பனையாகாது என்று அறிவிக்கப்பட்டதால், மருந்து வாங்குவதற்காக வந்திருந்த பொதுமக்கள் சிலர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர் தமிழ்நாடு அரசு மருந்து விற்பனை குறித்து அறிவித்ததை எடுத்துக் கூறியதனை அடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: உருமாற்றமடைந்த கரோனா வைரஸ்களையும் கோவாக்சின் தடுக்கும்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.