கோவை உட்பட தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் ரிலையன்ஸ் ஸ்மார்ட் பல்பொருள் அங்காடிகளில் ஆவின் பால் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் நிர்வாகம் சார்பில் பாலுக்கு லிட்டருக்கு 44 ரூபாய் முதல் 47 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரிலையன்ஸ் நிறுவனம் அரை லிட்டர் பாலை 22 ரூபாய்க்கு பதிலாக 12 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறது. இதற்கு பால் முகவர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ரிலையன்ஸ் நிறுவனம் அதிக லாபம் பார்க்கும் நிறுவனம் என்பதால் விலையை குறைவாக கொடுப்பதாகவும், இதனால் பொதுமக்கள் தங்களது நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்புவதாகவும் விமர்சிக்கும் அவர்கள், ஆவின் நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே தினசரி பெறப்படும் பால் விற்பனையாகாமல் இருந்தால் பால் சேதமாவதை தடுக்க இது போன்ற சலுகையை அறிவித்து இரவு வரை விற்பனை செய்வதாக ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஜியோமி நிறுவனத்தின் ரூ.5,551 கோடி சொத்துக்கள் முடக்கம்!