ETV Bharat / state

மூதாட்டி உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு: உறவினர்கள் போராட்டம்

கோவையில் மூதாட்டி உடலை பொது மயானத்தில் அடக்கம் செய்ய ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், சாலையின் நடுவே உடலை வைத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

உறவினர்கள் போராட்டம்
உறவினர்கள் போராட்டம்
author img

By

Published : Dec 4, 2022, 9:05 AM IST

கோயம்புத்தூர்: அன்னூர் அடுத்த காரேகவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்னக்கரசம்பாளையம் பகுதியை சார்ந்தவர் ரங்கம்மாள். 102 வயதான இவர் சனிக்கிழமை (டிச.3) காலை வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். அவரது உறவினர்கள் ரங்கம்மாள் உடலை காரேகவுண்டம்பாளையம் சாலையில் உள்ள பொது மயானத்தில் அடக்கம் செய்ய கொண்டு சென்றனர்.

இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ரங்கம்மாள் உடலை சாலையின் நடுவில் வைத்துவிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில் அன்னூர் காவல் ஆய்வாளர் நித்யா, அன்னூர் தாசில்தார் தங்கராஜ், மற்றும் ஊராட்சி தலைவர் தங்கராஜ் ஆகியோர் மூதாட்டியின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உறவினர்கள் போராட்டம்

ஆனால் ரங்கம்மாள் உறவினர்கள், தாங்கள் ஏற்கனவே பயன்படுத்தி வந்த மயானத்தில் பாலம் கட்டி சுருக்கி விட்டனர். அங்கு புதைப்பதற்கு இடமில்லை. எனவே இங்குதான் புதைப்போம் என்று கூறினர். ஞாயிற்றுக்கிழமை (டிச.4) அதிகாலை 4 மணி வரை போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதால் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து அதிகாலை 4.30 மணி அளவில் ரங்கம்மாள் உடலை ஏற்கனவே பயன்படுத்தி வந்த மயானத்தில் புதைப்பது என முடிவு செய்யப்பட்டது.

இதையும் படிங்க: 'கெடச்சது ஒரு பாட்டில் அதுலயும் ஈ..?- புலம்பும் மது பிரியர்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.