தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதியான பொள்ளச்சியில் உள்ள மீனாட்சிபுரம், கோவிந்தபுரம், கோபாலபுரம், நடுப்புணி உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசு பொது மக்களுக்கு ரேசன் கடைகளில் இலவச அரிசி வழங்குகிறது.
இந்த அரிசிகளை சிலர் பதுக்கி வைத்து கேரளாவிற்கு இருசக்கர வாகனங்கள், தனியார் பேருந்து, ரயில்கள் மூலம் கடத்தி விற்றுவருகின்றனர். இதை தடுக்கும் விதமாக காவல்துறையும், உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவும், குடிமைப் பொருள் வழங்கல் பிரிவினரும் கண்காணித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவிந்தபுரத்தில் ரேசன் அரிசி கடத்துவதாக பறக்கும்படையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து நேற்றிரவு(ஜூன் 8) அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள், பறக்கும்படையை பார்த்ததும் வண்டியை நிறுத்திவிட்டு ஓடினர். அதில் கேரளாவிற்கு கடத்த முயன்ற ரேசன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அரிசி மூட்டைகளையும் அரசி கடத்த உபகோகித்த இரண்டு இருசக்கர வாகனத்தையும் பறக்கும்படை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் தப்பி ஓடினர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.