கோவையில் உள்ள மத்திய சிறையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்குள்ள கைதிகளிடையே தடை செய்யப்பட்ட பொருட்களான பீடி, சிகரெட், செல்போன் ஆகியவை பயன்படுத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில், கோவை மத்திய சிறையில் உதவி ஆணையர் எழிலரசன் தலைமையில் 30 க்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வரும் இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதுவரை இந்த சோதனை நிறைவு பெறவில்லை.