டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களிலும், அவரது நண்பர்களுக்கு சொந்தமான இடங்களிலும் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் (ஆகஸ்ட்.10) அதிரடி சோதனை நடத்தினர்.
9 மணி நேரம் நீடித்த இச்சோதனையில், கணக்கில் வராத 13 லட்ச ரூபாய் பணமும், முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இரண்டாம் நாள் வரை தொடர்ந்த சோதனை
இந்நிலையில், இரண்டாம் நாளாக நேற்று (ஆகஸ்ட்.11) கோவை, பீளமேட்டில் அமைந்துள்ள எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய நண்பரான சந்திர பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான கே.சி.பி இன்ஜினியர்ஸ் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை தொடங்கினர்.
கல் குவாரி அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள்
அதே போல, இந்நிறுவனத்திற்குச் சொந்தமான விஎஸ்ஐ சாண்ட் கல்குவாரி அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில், விஎஸ்ஐ சாண்ட் கல் குவாரி அலுவலகத்திலிருந்து பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கே.சி.பி இன்ஜினியர்ஸ் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனை தொடர்வதால், அப்பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் நிர்வாக இயக்குநர்
இதற்கிடையில், கேசிபி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்திர பிரகாஷ் நெஞ்சுவலி காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னை சென்ற எஸ்பி வேலுமணி - 'ஜெய் வேலுமணி' என முழங்கிய ஆதரவாளர்கள்