ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு புகழேந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘சிலரை சிலரால் தான் கைது செய்ய முடியும். அதை செய்தவர் ஜெயலலிதா. சாதாரண மக்கள் கூட முதலமைச்சர் ஆகலாம் என்ற அவரின் அரசியலுக்கு எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் போன்ற தலைவர்களே உதாரணம்’ என்றார்.
அதேபோல், நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றதால் திமுகவிடம் இருந்து அந்த தொகுதிகள் தப்பித்தது. மக்கள் மன்றத்தில் தேர்தலைச் சந்திக்க திமுக தயாராக இல்லை’ என்று கூறினார்.
மேலும், ‘நாங்கள் அதிமுகவில் இணைவது தொடர்பாக முதலமைச்சர் தேதி அளித்த பிறகு இணைப்பு விழா நடத்தப்படும். அன்று தினகரனின் அரசியல் வாழ்வு முடியும்’ என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'ஜெயலலிதா சமாதிக்கு நடந்துகூட செல்லாத தினகரன்' - விளாசி தள்ளிய புகழேந்தி!