கோயம்புத்தூர் மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையம் பெருமாள் கோயில் வீதியில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து மாநகராட்சி அலுவலர்கள் அந்த வீதி முழுவதும் மூடினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 15-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் திடீரென சாலையில் திரண்டனர். அப்போது அவர்கள் தாங்கள் இதனால் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும் என்று அலுவலர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து அலுவலர்கள் தடுப்புகளை அகற்றினர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் படுக்கை வசதிகள் இல்லாததால் கரோனா நோயாளிகள் அவதி!