கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் கோட்டாம்பட்டி ஊராட்சி பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இவர்கள் வசிப்பிடத்தில் முறையான பாதுகாப்பின்றி தேங்காய் மஞ்சி பித்து களம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை நீக்கக் கோரி ஊர் பொதுமக்கள் சார் ஆட்சியர் வைத்தியநாதனிடம் மனு அளித்துள்ளனர்.
மனுவில், "முறையான பாதுகாப்பின்றி தேங்காய் மஞ்சி பித்து களம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் காற்றுமாசுப்படுவதுடன் வீடுகளுக்குள் மஞ்சி துகள்கள் நிறைகின்றன.
உணவு, குடிநீர் மற்றும் கண்களில் மஞ்சி துகள்கள் விழுவதுடன் மூச்சுத் திணறல், அலர்ஜி என நோய் பரவும் அபாயம் உள்ளது.
குடியிருப்பில் இருதய நோயாளிகள், கைக்குழந்தைகள், சிறுவர்கள், இரத்தக் கொதிப்பு மற்றும் சர்க்கரை நோயாளிகள், ஆஸ்துமா மற்றும் மூச்சுத்திணறல் உள்ள முதியவர்கள் வசிக்கின்றனர். பாதுகாப்பற்ற மஞ்சிக்களத்தால் முறையான சுகாதாரமின்றி பல இன்னல்களுக்கும் மற்றும் நோய் தாக்குதல்களுக்கும் ஆளாகின்றோம்.
ஆதலால், குடியிருப்பு பகுதியில் சுகாதாரமற்ற நிலையில் அமைந்திருக்கும் பித்து களத்தை நீக்கி பொதுமக்கள் அனைவரும் உரிய சுகாதாரத்துடன் வாழ வழிவகை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசின் மக்கள் நலத்திட்டங்களில் போலி பயனாளிகள் பெயரில் மோசடி!