கோயம்புத்தூர்: அன்னூர் பகுதி கணேசபுரத்தில் மனோகரன் என்பவருக்குச் சொந்தமான மளிகைக்கடையில் மது விற்பனை செய்வதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட மளிகைக் கடையில் காவல் துறையினர் ஆய்வுமேற்கொண்டனர். ஆய்வில், மளிகைக் கடையிலிருந்து 60-க்கும் மேற்பட்ட மதுபானங்கள், தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட 10 கிலோ குட்கா பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து காவல் துறையினர், குட்கா, மதுபானங்களைப் பறிமுதல்செய்து மனோகரனை கைதுசெய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஊரடங்கு என்பதால் கள்ளத்தனமாக மளிகைக் கடையில் மதுபானங்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல் துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: ஓபிஎஸ், ரவீந்திரநாத் மீது வழக்குப்பதிவு