ETV Bharat / state

தனியார் பேருந்துகளில் கட்டணக் கொள்ளை; பொதுமக்கள் புகார்! - private bus

கோவை: தனியார் பேருந்துகள் வார இறுதி நாட்களில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், பயணிகள் டிக்கெட் வழங்குவதற்கு பதிலாக லக்கேஜ் டிக்கெட் வழங்குவதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் பயணிகள் புகார் மனு அளித்துள்ளனர்.

தனியார் பேருந்துகள் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல்
author img

By

Published : Jul 8, 2019, 5:06 PM IST

கோவை அடுத்த பேரூர் பகுதியைச் சேர்ந்த முரளி. இவர் கடந்த வெள்ளியன்று காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்தில் சிங்காநல்லூர் சென்றுள்ளார். அப்போது பயணிகள் டிக்கெட் வழங்குவதற்கு பதிலாக லக்கேஜ் டிக்கெட் வழங்கியுள்ளனர். இது குறித்து நடத்துநரிடம் கேட்டதற்கு அவரை பாதி வழியில் இறக்கி விட்டுள்ளனர். இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த முரளி நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

பின்னர் முரளி செய்தியாளர்களிடம் கூறுகையில், "வெள்ளி, சனி ஆகிய வார இறுதி நாட்களில் இரவு நேரங்களில் தனியார் பேருந்துகள் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். வார இறுதி நாட்கள் என்பதால் தென்மாவட்டங்களுக்கு அதிகமான பயணிகள் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் செல்வதால் திட்டமிட்டு தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்து வருகின்றனர். என்னிடம் லக்கேஜ் இல்லாதபோது அதிக கட்டணம் வசூலித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

Intro:கோவை காந்திபுரத்தில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் தனியார் பேருந்துகள் வார இறுதி நாட்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு மேலும் பயணிகள் டிக்கெட் வழங்குவதற்கு பதிலாக லக்கேஜ் டிக்கெட் வழங்குவதாகவும் பயணிகள் புகார்.

Body:கோவை அடுத்த பேரூர் பகுதியைச் சேர்ந்த முரளி என்பவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளார் அதில் காந்திபுரம் நகர பேருந்து நிலையத்திலிருந்து சிங்காநல்லூர் நகர பேருந்து நிலையத்திற்கு செல்ல அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் பயணிகள் டிக்கெட் வழங்குவதற்கு பதிலாக லக்கேஜ் டிக்கெட் வழங்குவதாகவும் புகார் தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் கூறுகையில் வெள்ளி சனி ஆகிய வார இறுதி நாட்களில் இரவு நேரங்களில் காந்திபுரத்தில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் தனியார் பேருந்துகள் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் பயணிகளுக்கு லக்கேஜ் டிக்கெட் வழங்கி கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் வார இறுதி நாட்களில் தென்மாவட்டங்களுக்கு அதிகமான பயணிகள் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் செல்வதால் இதைக் குறிவைத்து திட்டமிட்டு தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் லக்கேஜ் கொண்டு செல்லாத போது தனக்கு லக்கேஜ் வழங்கி அதிக கட்டணம் வசூலித்தது மட்டுமல்லாமல் இதை கேட்டதற்கு பாதி வழியிலேயே இறக்கி விட்டதாகவும் புகார் தெரிவித்தார் மேலும் இரவு நேர டிக்கெட்டுகளுக்கு சரியான கட்டணம் வசூலிப்பது இல்லை எனவும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.