ETV Bharat / state

கோவையில் 10, 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய சிறைக்கைதிகள் 'ஆல்பாஸ்'

கோவை மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகளில் 10, 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சிபெற்றுள்ளதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

10, 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய சிறை கைதிகள் தேர்ச்சி

author img

By

Published : Jun 20, 2022, 9:48 PM IST

கோயம்புத்தூர்: தமிழ்நாடு முழுவதும் இன்று 12ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியானது. கோவை மாவட்டத்தில் உள்ள நான்கு கல்வி மாவட்டங்களில் உள்ள 524 பள்ளிகளில் 10ஆம் வகுப்பில் 19ஆயிரத்து 827 மாணவர்கள் 19ஆயிரத்து 804 மாணவிகள் என மொத்தம் 39ஆயிரத்து 661 பேர் தேர்வு எழுதினர்.

இதில், 36ஆயிரத்து 661 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் தேர்ச்சி 88.69 விழுக்காடும் மாணவிகள் 92.38 விழுக்காடும் பெற்று தேர்ச்சி பெற்றனர். ஒட்டுமொத்தமாக கோவை மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் 92.38 விழுக்காடு ஆகும். கடந்த 2019ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு தேர்வில் 14ஆவது இடத்தில் இருந்த கோவை மாவட்டம் தற்போது 9ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதனிடையே கோவை மத்திய சிறையில் பொதுத்தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய 20 கைதிகளும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 33 கைதிகளும் தேர்ச்சி பெற்றுள்ளதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பொறியியல் சேர்க்கை: முதல் நாளிலேயே 18ஆயிரம் பேர் பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.