கோவை மத்திய சிறைச்சாலையில் குண்டர் தடுப்பு சட்ட கைதிகள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கைதிகள், வெடிகுண்டு வழக்கில் கைதான கைதிகள், மாவோயிஸ்ட்டுகள் உள்ளிட்ட 1800க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர் . இந்தச் சிறைச்சாலையில் அவசர சிகிச்சைக்காக சிறை மருத்துவ பிரிவு இருந்தாலும் சிறைவாசிகளுக்கு மேல் சிகிச்சைகள் தேவைப்படும்பட்சத்தில் உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வர வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று, காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த தாராபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் (31) என்ற விசாரணைக் கைதியை கோவை மத்திய சிறையிலிருந்து சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
அப்போது, சுப்பிரமணியம் அதிகாலை 4.30 மணியளவில் சிறை கைதிகள் வார்டின் ஜன்னலை உடைத்துக்கொண்டு மருத்துவமனையிலிருந்து திடீரென தப்பியோட முற்பட்டார். இதை பார்த்த மருத்துவமனை வளாகத்தை சுற்றியுள்ள காவல் துறையினர் மற்றும் மருத்துவமனையின் தனியார் காவலர்களும் சுப்பிரமணியத்தை பிடிக்க முயன்றனர். ஆனால், அவர் காவல் துறை பிடியிலிருந்து தப்பிவிட்டார்
இதையடுத்து பந்தய சாலை காவல் துறை, விசாரணைக் கைதி சுப்பிரமணியத்தை பிடிக்க தீவிரம்காட்டி வருகின்றனர். போலீஸ் பிடியிலிருந்த கைதி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த நிலையில் தப்பியோடிய சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: கணவனின் சகோதரரை வெட்டிப்படுகொலை செய்த பெண் கைது