கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஊத்துப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவரது மனைவி வான்மதி நிறை மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், செப். 21ஆம் தேதி வலி ஏற்பட்டுள்ளது. அதன்பின் அவர் அன்னூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்ட நிலையில், மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டது.
அந்த நேரத்தில் ஜெனரேட்டரும் வேலை செய்யாததால் வான்மதியை வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதையடுத்து விக்னேஸ்வரன் வான்மதியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இருப்பினும் வான்மதிக்கு உடல் நிலை மோசமானது.
இதனால் மேல் சிகிச்சைக்காக தாயும் சேயும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு வான்மதி சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று (செப்.24) உயிரிழந்தார். இந்த உயிரிழப்புக்கு காரணம் அன்னூர் மருத்துமனையின் அலைக்கழிப்பு காரணம் என்று கூறி வான்மதியின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதன் காரணமாக மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. மறுப்புறம் தனியார் மருத்துவமனையும் இதுகுறித்து விளக்கம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 4 உபி இளைஞர்கள் கேரளாவில் கைது