ETV Bharat / state

இரண்டாவது முறையாக அரியாசனத்தில் அமர்கிறார் பிஆர் நடராஜன்!

கோவை: கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பிஆர் நடராஜன் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 214 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

பிஆர் நடராஜன்
author img

By

Published : May 23, 2019, 8:38 PM IST

17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பிஆர் நடராஜன் தனக்கு பின் வந்த பாஜகவின் சிபி ராதாகிருஷ்ணனை ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 214 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

பிஆர் நடராஜன் கல்லூரியில் இளம்கலை பட்டப்படிப்பு படிக்கும்போதே அரசியலில் ஈர்க்கப்பட்டு, இந்திய மாணவர் சங்க தலைவராக பொருப்பேற்று மாணவர்களின் உரிமைக்கான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்.மேலும், கடந்த 2009ஆம் ஆண்டு இதே கோயம்புத்தூர் தொகுதியில் எம்பியாக இவர் தேர்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

Coimbatore 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.