ETV Bharat / state

பொள்ளாச்சி அருகே ஊராட்சிகளில் துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு - ஊராட்சிகளில் துணை தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

கோவை: பொள்ளாச்சி குளத்துப்பாளையம் ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு மன்ற உறுப்பினர்கள் மூவர் வராததால் மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

pollachi
pollachi
author img

By

Published : Jan 31, 2020, 6:34 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்து உள்ள கிணத்துக்கடவு அடுத்துள்ள குருநல்லிபாளையம், தேவராயபுரம், கொல்லப்பட்டி, சின்ன நெகமம், குளத்துப்பாளையம் ஆகிய பகுதிகளில் ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடந்தது.

இதில் குருநல்லிபாளையம் ஊராட்சியில், துணைத் தலைவராக நாகரத்தினம் தேர்வுசெய்யப்பட்டார். தேவராயபுரம் ஊராட்சியில், துணைத் தலைவராக திருப்பதி கிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கோலார்பட்டி, சின்ன நெகமம், குளத்துப்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் துணைத் தலைவர் பதவிகளுக்கு ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலர் வராததால் மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இதில் குளத்துப்பாளையம், குளத்துப்பாளைய புதூர் ஊராட்சியில் 2500 மக்கள் வசிக்கின்றனர். இதில் 1000 வாக்குகள் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இங்கு ஆறு வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

குளத்துப்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் மறைமுகத் தேர்தலில் மூன்று பேர் மட்டும் வாக்கு அளிக்க வந்ததால் மறைமுகத் தேர்தல் 30ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டது. நேற்றும் மூன்று பேர் மட்டும் வாக்களிக்க வந்த நிலையில் துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது.

இது குறித்து, ஊராட்சி மன்றத் தலைவர் கன்னிகா பரமேஸ்வரி கூறுகையில், "மூன்று வருடங்களுக்கு பிறகு ஊராட்சி மன்றத் தேர்தல் நடந்தது. இதில் வெற்றி பெற்றுள்ளேன். ஆனால் மறைமுக துணைத் தலைவர் தேர்தல் தள்ளிப்போவது கவலையளிக்கிறது. இதனால் மக்களின் அடிப்படை தேவைகளும் செய்யமுடியாமல் உள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு தேர்தல் ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் மறுதேர்தல் நடத்த வேண்டும்" எனறார்.

இதையும் படிங்க: பெண் வேட்பாளர் கையை கடித்த பாமக வேட்பாளர்!

Intro:cansalBody:canselConclusion:பொள்ளாச்சி குளத்து பாளைய ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு மன்ற உறுப்பினர்கள் மூவர் வராததால் மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு . பொள்ளாச்சி- 30 பொள்ளாச்சி அடுத்து உள்ள கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்கு உற்பட்ட ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது இதில் குருநெல்லிபாளையம், தேவராயபுரம், கொல்லப்பட்டி, சின்ன நெகமம், குளத்துப்பாளையம் ஆகிய பகுதிகளில் ஊராட்சி துணைத்தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது, இதில் குருநெல்லிப்பாளையத்தில் நாகரத்தினம் தேர்வு செய்யப்பட்டர், தேவராயபுரத்தில் திருப்பதி கண்ணன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டர், கொல்லப்பட்டி, சின்ன நெகமம்,குளத்துப்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் துணைத் தலைவர் பதவிகளுக்கு ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலர் வராததால் மறைமுக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இதில் குளத்துப்பாளையம், குளத்துப்பாளைய புதூரில் ஊராட்சியில் 2500 மக்கள் வசிக்கின்றனர், இதில் பதிவான 1000 வாக்குகள் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது இதில் ஆறு வார்டு உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டனர், தேர்தல் ஆணையம் கடந்த 11ம் தேதி நடந்த உத்தரவு பிறப்பித்தது, குளத்துப்பாளைய ஊராட்ச்சி அலுவலகத்தில் மறைமுக தேர்தலில் மூன்று பேர் மட்டும் வாக்கு அளிக்க வந்ததால் மறைமுக தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு மறுதேதி 30ம் தேதி அறிவித்தது, மேலும் மூன்று பேர் மட்டும் வாக்கு அளிக்க வந்த நிலையில் மறைமுக துணைத் தலைவர் தேர்தல் நிறுத்தி வைக்க பட்டது. ஊராட்சி மன்றத் தலைவர் கூறும் பொழுது மூன்று வருடங்களுக்கு பிறகு ஊராட்சி மன்ற தேர்தல் நடந்தது இதில் வெற்றி பெற்று உள்ளேன் ஆனால் மறைமுக துணைத் தலைவர் தேர்வு தள்ளி போவதுகவலையளிக்கிறது மக்களின் அடிப்படை வசதிகள் செய்ய முடியாமல் உள்ளது, இதனை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் தக்க நடவடிக்கை எடுத்து மறு தேர்தல் நடத்த விரைவில் மறுதேதி அறிவிக்க வேண்டும் என தெரிவித்தார். பேட்டி- 1)மணி. (குளத்துப்பாளையம்) 2)கன்னிகா பரமேஸ்வரி ஊராட்சி மன்ற தலைவர்)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.