ETV Bharat / state

“லியோ வேட்டைக்கும் ரெடி! கோட்டைக்கும் ரெடி!” - விஜய் ரசிகர்களின் பரபரப்பு போஸ்டர்! - sevan screen studio

Leo Movie vijay poster: லியோ திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், கோவையில் பல்வேறு இடங்களில் விஜய் ரசிகர்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

Leo Movie vijay poster
விஜய் ரசிகர்கள் சார்பில் போஸ்டர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2023, 11:41 AM IST

கோயம்புத்தூர்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம், லியோ. லியோ படத்தை செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து உள்ளது. லியோ படம் குறித்த அப்டேட் தொடங்கிய நாள் முதலே பல்வேறு சர்சைகளைச் சந்தித்து வருகிறது. முன்னதாக “நா ரெடிதான் வரவா” பாடலில் விஜய் சிகரெட் பிடிப்பது தொடர்பான காட்சிகள், டிரெய்லரில் விஜய் ஆபாச வசனம் பேசியது போன்ற பல்வேறு சர்சைகளைச் சந்தித்து உள்ளது.

மேலும், லியோ படத்திற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. குறிப்பாக, ரசிகர்களின் சிறப்பு காட்சியாக 4 மணி காட்சிக்கு அரசு அனுமதி மறுத்து உள்ளது. மேலும், பேனர் மற்றும் போஸ்டர்கள் ஒட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல சர்ச்சைகள் மத்தியில் லியோ படம் நாளை வெளியாக உள்ள நிலையில், தற்போது விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடத் தொடங்கி உள்ளனர்.

அந்த வகையில், பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியும், சில மாவட்டங்களில் கட் அவுட்டுகள் வைத்தும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் "லியோ வேட்டைக்கும் ரெடி! கோட்டைக்கும் ரெடி” என, 234 என்று தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

அதேபோன்று, 86வது வார்டு புல்லுக்காடு பகுதி விஜய் ரசிகர்கள் சார்பில் "தமிழும் தளபதியும் எங்கள் அடையாளம். ஓராயிரம் ஓநாய்களின் ஓலம் ஒரு சிங்கத்தின் கர்ஜனைக்கு ஈடாகாது" என குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:LCU-வில் லியோ இணைவது உறுதி? - உதயநிதி ஸ்டாலினின் சூசகமான ட்வீட்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.