ETV Bharat / state

182 செங்கல் சூளைகளை மூடுவதற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை!

author img

By

Published : May 28, 2020, 12:32 PM IST

கோயம்புத்தூர்: தடாகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அனுமதியின்றி இயங்கும் 182 செங்கல் சூளைகளை மூடுவதற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்திருப்பது தங்களுக்குத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாகத் தெரியவந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.

182 செங்கல் சூளைகளை மூடுவதற்கு மாசு கட்டுப்பாடு வாரியம் பரிந்துரை

கோயம்புத்தூர் மாவட்டம் தடாகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 192 செங்கல் சூளைகள் இயங்கிவருகின்றன. செங்கல் சூளைகளுக்கான செம்மண் சுற்றுவட்டார கிராமங்களில் தோண்டியெடுத்து பயன்படுத்திவருகின்றனர்.

இந்நிலையில் சின்னதடாகம், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், வீரபாண்டி, சோமையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி செம்மண் எடுக்கப்படுவதாகப் புகார் எழுந்தது.

விளைநிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள் மட்டுமின்றி நீர் நிலைகளையும் விட்டுவைக்காமல் மண் வளம் தொடர்ந்து சுரண்டப்பட்டுவருகிறது.

கனிமவள விதிகளின்படி அனுமதிபெற்ற அரசு நிலங்களாக இருந்தாலும், தனியார் நிலங்களாக இருந்தாலும் மூன்று அடி ஆழத்துக்குள் மட்டுமே மண் எடுக்க வேண்டும், கனரக வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாது, பக்கத்து நிலத்துக்கு சேதம் ஏற்படாத வகையில் போதிய இடைவெளியில் மண் எடுக்க வேண்டும், குறிப்பிட்ட காலத்திற்குள் மட்டுமே மண் எடுக்க வேண்டும் உள்ளிட்ட சட்டங்களை மீறி மண் எடுத்துவருகின்றனர்.

லாரிகள் மூலம் மணல் எடுக்கும் ஊழியர்கள்
லாரிகள் மூலம் மணல் எடுக்கும் ஊழியர்கள்

நிலங்களாக இருந்த இடங்களெல்லாம் தற்போது மிகப்பெரிய பள்ளங்களாக மாறிவருவதால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, விவசாயம் முடங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

நிலம், நீர்வளம் மிகுந்த பகுதியில் 20 அடி முதல் 150 அடி வரை தோண்டி செம்மண் எடுக்கப்படுவதால், கிராமம் முழுவதும் பள்ளங்களாகவும், குழிகளாகவும் காணப்படுகிறது.

பள்ளங்களும், குழிகளுமாக காணப்படும் நிலங்கள்

அண்மையில் செங்கல் சூளைகள் எதுவும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் முறையான அனுமதி பெறாமல் இயங்கிவருவது அப்பகுதி மக்களுக்குத் தெரியவந்தது.

மேலும், தடாகம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் அரசு அனுமதியின்றி செயல்பட்டுவரும் செங்கல் சூளைகள், அதிகமான ஆழத்திற்கு செம்மண் எடுத்தால், அந்தச் செங்கல் சூளைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட வன அலுவலர் கோவை மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை கடிதம் எழுதியிருப்பதும் தற்போதுதான் பொதுமக்களுக்குத் தெரியவந்தது.

விதியை மீறி ஆழமாக தோண்டிவைக்கப்பட்ட நிலம்

இந்நிலையில் தடாகம் பகுதியைச் சேர்ந்த கணேஷ் என்பவர் இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்ட கேள்விகளுக்கு, தடாகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கும் 182 செங்கல் சூளைகளை மூட, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்திருப்பதாகத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பதிலளித்துள்ளது.

இந்தாண்டு பிப்ரவரி 18ஆம் தேதிமுதல் மார்ச் 6ஆம் தேதிவரை 182 செங்கல் சூளைகளுக்கு மூடுதல் உத்தரவு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டம்
தகவல் அறியும் உரிமைச் சட்டம்

மொத்தமுள்ள 192 செங்கல் சூளைகளில் 182 செங்கல் சூளைகளை மூட மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்திருந்தாலும், தொடர்ந்து பல்வேறு விதிமுறைகளை மீறி இயங்கிவரும் செங்கல் சூளைகள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.

இதையும் படிங்க: 30 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து ரூ.2 கோடிக்கும் மேல் இழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.