கோயம்புத்தூர் பொள்ளாச்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வியாபாரிகள் சங்கம் சார்பில் மாவட்ட சார் ஆட்சியர் அலுவலகத்தில் சீல் வைக்கப்பட்டுவரும் குடிநீர் ஆலைகள் குறித்து மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது, ”தங்கள் குடிநீர் ஆலையங்கள் மூலம் 15 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்து வருகிறோம். தற்போது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிறுவனங்கள், அனுமதியின்றி செயல்படும் நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி சீல் வைத்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தால் அனைத்து வியாபாரிகளுடன், அனுமதி பெற்ற நிறுவனங்களும் இணைந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகிறது, வியாபாரிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது.
கடந்த 2014ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு நிலத்தடி நீர் காணுமாறு அரசாணை நிறைவேற்றப்பட்டது. 2014ஆம் ஆண்டு முன் நிறுவனங்களுக்கு நிலத்தடி நீர் சான்று இல்லாத காரணத்தால் அரசு அலுவலர்கள் தற்போது சீல் வைத்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு அவர்களின் கோரிக்கையை ஏற்று இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதற்கான மனுவை சார் ஆட்சியர் நேர்முக உதவியாளரிடம் கொடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: காஞ்சியில் அனுமதியின்றி செயல்பட்ட 57 குடிநீர் ஆலைகளுக்குச் சீல்!