பொள்ளாச்சி அருகே ஜமீன் ஊத்துக்குளி கிராமத்தில் அமைந்துள்ள மாகாளியம்மன் கோவில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். ஜமீன்தார்கள் காலத்தில் பராமரிக்கப்பட்டு வந்த இக்கோயில் சுற்று வட்டார கிராம மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வருகிறது. இதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 8ஆம் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது.
முக்கிய நிகழ்ச்சியில் பக்தர்கள் குண்டம் இறங்கித் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு இன்று நடைபெற்றது. திருவிழாவில் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் சென்றனர்.