ETV Bharat / state

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு - hearing adjourned to october 6

பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளின் நீதிமன்ற காவலை நீட்டித்தும் வழக்கு விசாரணைனை அக். 6 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

விசாரணை ஒத்திவைப்பு
விசாரணை ஒத்திவைப்பு
author img

By

Published : Sep 29, 2021, 6:52 PM IST

கோயம்புத்தூர்: தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது.

சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வந்த வழக்கு பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்டது. அதிமுக நகர மாணவரணி செயலாளர் அருளானந்தம் உள்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட ஒன்பது பேர் சபரிராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன், வசந்த்குமார், சதீஷ், பாபு, ஹெரோன் பால், அருளானந்தம், அருண்குமார் ஆகியோர் கோவை நீதிமன்றத்தில் கடந்த செப்.21 ஆம் தேதி ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

சிபிஐ அலுவலர்கள் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து அவர்களுக்கும் நகல் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று (செப்.29) காணொளி மூலம் இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி குற்றஞ்சாட்டப்பட்டோரின் நீதிமன்ற காவலை நீட்டித்து, விசாரணையை அக்டோபர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: சென்னையில் இரட்டை அடுக்கு பறக்கும் பாலம் - அமைச்சர் எ.வ.வேலு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.