ETV Bharat / state

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளின் நீதிமன்ற காவலை நீட்டித்தும் வழக்கு விசாரணையை நவம்பர் 2 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு
author img

By

Published : Oct 28, 2021, 6:49 PM IST

தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சபரிராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன், வசந்த்குமார், சதீஷ், பாபு, ஹெரோன் பால், அருளானந்தம், அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், குற்றவாளிகள் அனைவருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டு, விசாரணை இன்று (அக்.28) காணொளி மூலம் நடைபெற்றது. பின்னர் விசாரணையை நவம்பர் 2 ஆம் தேதிக்கு கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி ஒத்திவைத்தார்.

கடந்த 20 ஆம் தேதி குற்றவாளிகள் நீதிமன்றத்திலிருந்து அழைத்து சென்றபோது, கோயம்புத்தூர் புறநகர் பகுதியில் குற்றவாளிகளை அவர்களது உறவினர்கள், சந்திக்க அனுமதித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: பொள்ளாச்சி வழக்கில் எஸ்.ஐ., உள்பட 7 காவலர்கள் சஸ்பெண்ட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.