ETV Bharat / state

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான மூவர் கோபி கிளை சிறைக்கு மாற்றம்! - பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் மூவர் கைது

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நேற்று (ஜன.06) கைதான மூவரை கோவை மத்திய சிறையிலிருந்து கோபி கிளை சிறைக்கு மாற்றப்பட்டனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு
author img

By

Published : Jan 7, 2021, 12:59 PM IST

பொள்ளாச்சி பாலியல் வழக்கானது கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் நிலையில் நேற்று முந்தினம் (ஜன.05) இவ்வழக்கில் தொடர்புடைய அதிமுக பிரமுகர் உள்பட மூன்று பேரை சிபிஐ காவல் துறையினர் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து, அவர்கள் நேற்று (ஜன.06) கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் மூவர் மீதும் 376D பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 20ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி நந்தினிதேவி உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து நேற்று (ஜன.06) மதியம் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் நேற்றிரவே (ஜன.06) அவர்கள் கோபி கிளை சிறைக்கு மாற்றப்பட்டனர்.

கரோனா காலம் என்பதால் கோவை மத்திய சிறையில் புதியதாக வரும் குற்றவாளிகளை அனுமதிக்காததால் இவர்களை கோபி கிளை சிறைக்கு மாற்றியுள்ளனர்.

இதையும் படிங்க: பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைது செய்யப்பட்ட மேலும் 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.