ETV Bharat / state

'பொள்ளாச்சி ஆபாச வீடியோ வழக்கை உச்ச நீதிமன்ற விசாரிக்க வேண்டும்!' - supreme court

கோவை: பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்த வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்தால் மட்டும் போதாது, அது உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரிக்கப்பட வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

பொள்ளாச்சி பரப்புரையில் டிடிவி தினகரன்
author img

By

Published : Apr 4, 2019, 1:01 PM IST

பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி அமமுக வேட்பாளர் முத்துக்குமாரை ஆதரித்து அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது, "தமிழ்நாட்டில் நடக்கும் ஆட்சி முடிவுக்கு வரும் நேரம் நெருங்கிவிட்டது. ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் பொய்மூட்டைகளை அவிழ்த்துவிடுகிறார்.

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் விவகாரத்தில் ஆளும் கட்சியின் சம்பந்தம் இருக்கிறது என்று பொதுமக்களிடையே சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் பொள்ளாச்சி ஆபாச வீடியோ எடுத்த வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்தால் மட்டும் போதாது, அது உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரிக்கப்பட வேண்டும். சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த வழக்கு ஏன் இன்னும் சிபிசிஐடி விசாரணையிலே இருக்கிறது?

கொச்சியில் செயல்படும் தென்னை வளர்ச்சி வாரியம் பொள்ளாச்சியில் அமைக்கப்படும்"என அவர் உறுதியளித்தார்.

பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி அ.ம.மு.க., வேட்பாளர் முத்துக்குமாரை ஆதரித்து அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி., தினகரன் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் பரப்புறை.

தமிழகத்தில் நடக்கும் ஆட்சி முடிவிற்கு வரும் நேரம் வந்துவிட்டது.

ஸ்டாலின் பொய்களை  மூட்டைகளில் அவிழ்த்து விடுகிறார்.

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் விவகாரம் ஆளும்கட்சி சம்பந்தம் இருக்குமோ என்று பொதுமக்களிடையே சந்தேகம் ஏற்படுகிறது.

பொள்ளாச்சி பாலியல் வலகு CBI க்கு மாற்றம் செய்தால் மட்டும் போதாது உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் இந்த வழக்கு விசாரிக்க வேண்டும். 

CBIயிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த வழக்கு இன்னும் ஏன் cbcid விசாரிக்கிறது.

இந்த ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு கிடையாது என்பது தாண் உண்மை.

கொச்சியில் செயல்பாடும் தென்னை வளர்ச்சி வாரியம் பொள்ளாச்சியில் அமைக்கபபடும்.

பரம்பிகுளம் ஆழியாறு பாசனத்திட்டாம் மூலம் நீர் கொண்டுவரப்பட்டு கோதவாடி குளத்தை நிரப்பி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படும்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.