பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கடந்த 5ஆம் தேதி மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டு கோபி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மூவரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என சிபிஐ தரப்பில் கடந்த 11ஆம் தேதி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், ஹெரன்பாலை 2 நாள்கள் காவலில் எடுத்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதியளித்தது.
இதனையடுத்து ஹெரன்பாலை சிபிஐ காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், நேற்றிரவு நீதிபதி வீட்டில் ஹெரன்பாலை ஆஜர்படுத்திய சிபிஐ, மீண்டும் கோபிசெட்டிப்பாளையம் கிளைச்சிறையில் அடைத்தனர்.