இலங்கையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 300-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதைதொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியிருப்பதாகவும், இதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அவர்கள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை, தமிழக காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள ரயில்நிலையங்கள், பொதுமக்கள் கூடும் இடம் ஆகியவற்றில் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று கோவை மாவட்டம், பொள்ளாச்சி ரயில் நிலையத்திலும் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
கோவையில் கடந்த 1998ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 46பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.