ETV Bharat / state

கோவில்பாளையத்தில் தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்! - பொள்ளாச்சி அருகே தீ விபத்து

கோவை: கோவில்பாளையத்தில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக், டயர் கழிவுகள் எரிந்து நாசமானது.

covai fire
author img

By

Published : Mar 11, 2019, 2:04 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு அடுத்துள்ள கோவில்பாளையத்தில் தனியாருக்குச் சொந்தமான நிலம் உள்ளது. இங்கு பிளாஸ்டிக், ரப்பர், டயர் கழிவுகள் கொட்டப்பட்டு குவிக்கப்பட்டிருந்தது.

அப்பகுதியில் உள்ள மின்சார கம்பி செல்லும் தடத்தில் இருந்த தென்னை மர ஓலை மின்கம்பியில் உரசியதால் ஏற்பட்ட தீப்பொறியில் நிலத்தில் இருந்த பொருட்களில் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து தீ அருகில் குவித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் கழிவுகளில் வேகமாக பரவியது.

தீயினால் ஏற்பட்ட கரும் புகையைக் கண்டு சம்பவ இடத்திற்கு வந்த விவசாயிகள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். கிணத்துக்கடவு, பொள்ளாச்சியிலிருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள், பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கப் போராடினார்கள்.

சுமார் மூன்று மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தார்கள். ஆனாலும், வெப்பத்தால் டயர்கள் மற்றும் ரப்பர்கள் தொடர்ந்து தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததால் தீயணைப்பு படை வீரர்கள் தீயை முழுமையாக அணைக்கப் போராடி வருகிறார்கள். தீ எரிந்து வரும் இடத்தில் தண்ணீர் வசதி இல்லாததால், மாற்று இடத்திலிருந்து டேங்கர் லாரி மூலம் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைக்கும் பணியில் நடைபெற்று வருகிறது.

இதனால் பல லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் மற்றும் டயர் கழிவுகள் தீயில் எரிந்து சாம்பல் ஆனது. தீயினால் ஏற்பட்ட புகையினால் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு காற்று மாசுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பொள்ளாச்சி அருகே கோவில்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் மற்றும் டயர் கழிவுகள் தீயில் எரிந்து சாம்பல். பொள்ளாச்சி -11

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு அடுத்துள்ள கோவில்பாளையத்தில்
தனியாருக்கு சொந்தமான நிலத்தில் பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் டயர் கழிவுகள் கொட்டப்பட்டு குவிக்கப்பட்டிருந்தது. இதன் அருகில் கம்பங்கள் மூலம் மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. மின்சார கம்பி செல்லும் தடத்தில் இருந்த தென்னை மர ஓலை மினகம்பியில் உரசியதால் ஏற்பட்ட தீப்பொறியில் நிலத்தில் இருந்த காய்ந்த சருகுகள், ஓலைகள் எளிதில் தீப்பிடித்து எரிந்து, தீ அருகில் குவித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் கழிவுகளில் வேகமாக பரவியது. தீ பரவிய இடத்தில் ஆள் நடமாட்டம் இல்லாததால் தீ பரவியதை ஆரம்பத்திலேயே அணைக்க முடியவில்லை. தீயினால் ஏற்பட்ட கரும் புகையை கண்டு சம்பவ இடத்திற்கு வந்த விவசாயிகள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சியிலிருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க போராடினார்கள். சுமார் 3 மணி நேரம் போராடி  தீயை கட்டுக்குள் கொண்டு வந்தார்கள். ஆனாலும் வெப்பத்தால் டயர்கள் மற்றும் ரப்பர்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததால் தீயணைப்பு படை வீரர்கள் தீயை முழுமையாக அணைக்க போராடி வருகிறார்கள். தீ எரிந்து வரும் இடத்தில் தண்ணீர் வசதி இல்லாததால் மாற்று இடத்தில் இருந்து டேங்கர் லாரி மூலம் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைத்து வருகிறார்கள்.
இதனால்பல லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் மற்றும் டயர் கழிவுகள் தீயில் எரிந்து சாம்பல்
ஆனது.
தீயினால் ஏற்பட்ட புகையினால் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு காற்று மாசு ஏற்பட்டுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.