கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அங்கலக்குறிச்சி ஆத்மநாப மலையடிவாரத்தில் பிரசித்தி பெற்ற காலபைரவர் திருக்கோயில் உள்ளது.
இந்தக் கோயிலில் இன்று உலக நன்மை வேண்டியும், உயிரினங்கள் அனைத்தும் நன்மை பெற்று இன்புற்று வாழவேண்டியும், மழை பொழிந்து விவசாயம் செழிக்கவும், மக்கள் நோயற்ற வாழ்வு வாழ்ந்து குறைவற்ற செல்வம் பெறவேண்டியும் நவாக்ஷரி ஜபம் ஹோமம் நடைபெற்றது.
அப்போது, அம்பிகைக்கு ஒரு லட்சம் மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டு, பத்தாயிரம் ஹோம பொருட்களை கொண்டு பூர்ணாகுதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோமாதா பூஜை, காலபைரவர் வீதி உலா நடந்தது.
இதில், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு வரவுள்ள திருமலை திருப்பதி கோயில் - நேரில் ஆய்வு செய்த தேவஸ்தான உறுப்பினர்கள்