கோயம்புத்தூர்: பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை சார்பில் கொப்பரை தேங்காய் விலை ஏற்றம் குறித்து பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி சுற்று வட்டார விவசாயிகள் மற்றும் கேரளா விவசாயிகள், பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை உறுப்பினர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது எம்பி சண்முகசுந்தரம் பேசுகையில், “மத்திய அரசு மூலம் விவசாயத்துக்கு பல்வேறு சலுகைகள் மானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. உணவுப் பொருள் மற்றும் தானியம் வகைகள், விவசாயம் சார்ந்த தொழில் முதலீடு திட்டங்கள் அதிகளவில் உள்ளன.
விவசாயிகள் விளையும் பொருள்களை எடுத்துச் செல்ல ரயில்வே துறை மூலம் கிசான் திட்டத்தை மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. கூடுதலாக இரண்டு பெட்டிகள் இணைக்கப்பட்டு இதில் இளநீர் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் அனுமதியுடன் வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கொப்பரை தேங்காய் விலை ஏற்றம் குறித்து மனு அளிக்கப்படவுள்ளது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ளது... மணிசங்கர் அய்யர்