டெல்லியில் சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேலை நேரில் சந்தித்து பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம் மனு அளித்துள்ளார்.
அதில், "வால்பாறையை மாதிரி சுற்றுச்சூழல் மலைநகரமாக அறிவிக்கவும், வால்பாறை பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட கேபிள் கார் திட்டத்தைப் புதுமைப்படுத்தி சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் வகையில் சீரமைக்க வேண்டும். இத்திட்டங்களை விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இச்சந்திப்பின் போது திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, வால்பாறை சுற்றுலாக் குழுமத்தின் சார்பில் உத்தம ராஜ், கிரேட் மவுண்ட் ரிசார்ட் ஸ்ரீராம் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: ’தமிழ்நாட்டில் எங்கிருந்தாலும் ரேஷன் பொருள்கள் பெறலாம்’ - காமராஜ்