ETV Bharat / state

மாசாணியம்மன் கோயில் நள்ளிரவு மயான பூஜை - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு! - மாசாணியம்மன் கோயில் மயான பூஜை

கோயம்புத்தூர்: ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மயான பூஜை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

மாசாணியம்மன் நள்ளிரவு மயான பூஜை
மாசாணியம்மன் நள்ளிரவு மயான பூஜை
author img

By

Published : Feb 7, 2020, 11:47 PM IST

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற அம்மன் கோயில்களில், ஆனைமலை மாசாணியம்மன் கோயிலும் ஒன்றாகும். இந்தக் கோயில் குண்டம் திருவிழா கடந்த மாதம் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

குண்டம் திருவிழாவுக்கு முன்னர் நடைபெறும் மயான பூஜைக்காக நேற்று நள்ளிரவு மாசாணியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், மயான அருளாளி அருண், தலைமை முறைதாரர் மனோகரன் உட்பட 20க்கும் மேற்பட்ட அருளாளிகள் ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்துக்கு அம்மனின் சூலம் தாங்கி சென்றனர். அங்கு சயன கோலத்தில், மாசாணியம்மனின் உருவம் மயான மண்ணால் உருவாக்கப்பட்டிருந்தது.

பின்னர், அதிகாலை 1 மணியளவில் மேளதாளங்கள் முழங்க அம்மனின் திருவுருவத்தை மறைத்திருந்த திரை விலக்கப்பட்டது. இதையடுத்து, மயான அருளாளி அம்மனின் மண் உருவத்தைச் சிதைத்து, எலும்பை கவ்வியப்படியே பட்டுசேலையில் பிடி மண்ணினை எடுத்தார்.

பின்னர், மயான பூஜையானது அதிகாலை 2 மணியளவில் முடிவடைந்தது. மேலும், வால்பாறை துணை காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன் தலைமையில் காவல் துறையினர், ஊர்க்காவல் படையினர் என நூற்றிற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மாசாணியம்மன் நள்ளிரவு மயான பூஜை

இதையும் படிங்க: மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய குடமுழுக்கு: திரளான பக்தர்கள் பங்கேற்பு

Intro:kovilBody:kovilConclusion:மாசாணியம்மன் கோயில் நள்ளிரவு மயான பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

பொள்ளாச்சி- 7

கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மயான பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் ஆனைமலை மாசாணியம்மன் கோயிலும் ஒன்றாகும். இந்த கோயில் குண்டம் திருவிழா கடந்த மாதம் 24 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. குண்டம் திருவிழாவுக்கு முன்னர் நடைபெறும் மயான பூஜைக்காக நேற்று நள்ளிரவு மாசாணியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் மயான அருளாளி அருண், தலைமை முறைதாரர் மனோகரன் உட்பட 20 -க்கும் மேற்பட்ட அருளாளிகள் ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்துக்கு அம்மனின் சூலம் தாங்கி சென்றனர். அங்கு சயன கோலத்தில், மாசாணியம்மனின் உருவம் மயான மண்ணால் உருவாக்கப்பட்ட இருந்தது.

அதிகாலை 1 மணிக்கு மேளதாளங்கள் முழங்க அம்மனின் திருஉருவத்தை மறைத்திருந்த திரை விலக்கப்பட்டது. மயான அருளாளி அருண் அம்மனின் மண் உருவத்தை சிதைத்து, எலும்பை கவ்வியப்படியே பட்டுசேலையில் பிடி மண்ணினை எடுத்தார். பின்னர் மயான பூஜை பின்னிரவு 2 மணிக்கு முடிவடைந்தது. வால்பாறை துணை காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன் தலைமையில் போலீஸார் மற்றும் ஊர்காவல் படையினர் என 100 மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியல் ஈடுபட்டிருந்தனர். மயான பூஜையொட்டி பொள்ளாச்சியிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான பூஜையில் மயான அருளாளி பட்டுசேலையில் பிடி மண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.