ETV Bharat / state

மருத்துவமனை விரிவாக்க பணியால் விபத்து ஏற்படும் அபாயம் - பொள்ளாச்சி அரசு மருத்துவமனை

கோவை: பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் விரிவாக்கத்திற்காகத் தோண்டப்பட்ட அஸ்திவாரத்தால் குவிக்கப்பட்டுள்ள மண் குவியல் விபத்தை ஏற்படுத்தும் அபாயத்தில் உள்ளது.

pollachi hospital expansion
author img

By

Published : Sep 19, 2019, 4:39 PM IST

பொள்ளாச்சி அரசு மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டதையடுத்து விரிவாக்க பணிகள் நடந்துவருகின்றன. இந்த கட்டடங்கள் கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டப்பட்ட உபரி மண் அருகில் உள்ள இடத்தில் மலைபோல் குவியலாகக் கொட்டப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் உள்ள மதில் சுவர் அந்த மண்ணை தாக்குப்பிடிக்கும் நிலையில் இல்லாமல் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளதால், மதில் சுவர் முழுவதும் மூங்கில் கட்டைகளைக் கொண்டு முட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது

பொள்ளாச்சி மத்தியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வர நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் அவ்வழியைப் பயன்படுத்துவதால், அவர்கள் அச்சத்துடன் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பாதாள சாக்கடை திட்டத்துக்காக ரோட்டில் தோண்டப்பட்ட குழிகளை, இந்த மண்ணைக் கொட்டியாவது சீரமைத்தால் மக்கள் சிரமமில்லாமல் செல்லாம்.

மருத்துவமனை விரிவாக்க பணியால் விபத்து ஏற்படும் அபாயம்

எனவே ஆபத்தான நிலையில் உள்ள இந்த மண் குவியலை உடனடியாக நகராட்சி நிர்வாக அரசு அலுவலர்கள் அகற்றினால் பெரும் உயிரிழப்பு விபத்தைத் தவிர்க்கலாம் என பொதுமக்கள் கூறுகின்றனர்.

Intro:munishpaltyBody:munishpaltyConclusion:பொள்ளாச்சியில் ரூ. 6.2 கோடி செலவில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை விரிவாக்க பணிக்காக கட்டிடம் கட்ட தோண்டப்பட்ட அஸ்திவாரம் மண் சுற்றுச்சுவர் அருகே மலைபோல் குவியலாக குவிக்கப்பட்டுள்ளதால் மதில்சுவர் விரிசல் ஏற்பட்டு இடிந்து விபத்தை ஏற்படுத்தும் அபாய நிலையில் உள்ளது கண்டு கொள்ளாத அரசு அதிகாரிகள்..
பொள்ளாச்சி செப்டம்பர்..18
பொள்ளாச்சி அரசு மருத்துவமனை விரிவாக்கத்துக்காக, 6.2 கோடி ரூபாய் செலவில், நான்கு தளங்களுடன் கட்டடம் கட்டப்படுகிறது பொள்ளாச்சி அரசு மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது அதன்பின் மருத்துவமனை அருகில் வருவாய்த்துறைக்கு சொந்தமான 2.32 ஏக்கர் இடம் விரிவாக்க பணிகளுக்கு மருத்துவமனை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது இதனையடுத்து மருத்துவமனைக்கு தரை தளம் மற்றும் நான்கு தளங்களுடன் ஒருங்கிணைந்த புற நோயாளிகள் பகுதி, 48 படுக்கைகளுடன் கூடிய வார்டு மற்றும் மகப்பேறு, பிறந்த குழந்தைகளுக்கான நவீன அறுவை சிகிச்சை அரங்கம், லிப்ட் மற்றும், சாய்தளத்துடன் கட்டடம் கட்டும் பணிக்கு, 6.2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மொத்தம், 3,133 சதுரமீட்டர் பரப்பில் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன இந்த கட்டிங்கள் கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டப்பட்ட உபரி மண்ணை அருகில் உள்ள இடத்தில் மலைப்போல் குவியலாக கொட்டப்பட்டுள்ளனர் அந்த இடத்தில் உள்ள மதில் சுவர் மண்ணை தாக்குபிடிக்கும் நிலை இல்லாமல் விரிசல் ஏற்பட்டு இடிந்து விலும் நிலையில் உள்ளாதால் மதில் சுவர் முழுவதும் மூங்கில் கட்டைகளைக் கொண்டு முட்டுக் கொடுக்கப்பட்டு உள்ளது பொள்ளாச்சி மத்தியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நாள் தோரும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் அந்த வழியில் தான் வந்து செல்கின்றனர் மற்றும் பள்ளி குழந்தைகள் பொதுமக்கள் அந்த சாலையை கடந்து செல்லும் போது இடிந்து விழுந்துவிடும் என அச்சத்துடன் அவ்வழியாக செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது மேலும் வாகனங்கள் அதிக அளவில் அந்த வழியில் செல்வதால் மண் சரிந்து மதில்சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்திலும் வாகன ஓட்டிகள் செல்கின்றனர் மேலும் அப்பகுதி மக்கள் கூறுகையில் பொள்ளாச்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட குழிகள் முழுமையாக மூடப்பட்டதால் ரோடு குண்டும் குழியுமாக காணப்படுவதால் வாகனங்கள் செல்வதற்கு மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் எனவும் இங்கு கொட்டப்பட்டுள்ள மண்ணை குண்டும் குழியுமாக உள்ள சாலையில் கொட்டி சாலையை சரி செய்தால்கூட மக்கள் சிரமமில்லாமல் செல்ல வசதியாக இருக்கும் எனவும் பொதுமக்கள் கூறுகின்றனர் எனவே ஆபத்து நிலையில் உள்ள இந்த மண் குவியலை உடனடியாக நகராட்சி நிர்வாக அரசு அதிகாரிகள் அகற்றப்பட்டால் பெரும் உயிரிழப்பு விபத்தை தவிர்க்கலாம் என பொதுமக்கள் கூறுகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.