பொள்ளாச்சியில் நாளுக்கு நாள் வாகன நெரிசல் அதிகமாக உள்ளதால் கடும் போக்குவரத்து நெருக்கடியில் வாகன ஓட்டிகள் சிக்கித் தவிக்கின்றனர், குறிப்பாக காலை மாலை வேளைகளில் மற்றும் முகூர்த்த நாட்களில் பாலக்காடு சாலை, காந்தி சிலை, உடுமலை சாலைகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனையடுத்து குறுகலான சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது, இதைத்தொடர்ந்து பொள்ளாச்சியில் போக்குவரத்து நெருக்கடியில் உள்ள கோவை சாலை, நல்லப்பா தியேட்டர், உடுமலைப்பேட்டை சாலை, சார் அலுவலகம், காந்தி சிலை சிக்னல், தபால் நிலையம் உடுமலை சாலை சந்திப்பு என இருவழி சாலையாக மாற்றி அமைக்கப்படவுள்ளது.
மேலும், உடுமலை சாலை சந்திப்பிலிருந்து பல்லடம் சாலையும் அகலப்படுத்தப்படுகிறது. இதற்காக வலது மற்றும் இடது புறங்களில் அளவீடு செய்து பெயிண்டால் அடையாளம் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
சாலை விரிவாக்க பணிக்காக நிலங்களைத் வழங்கியவர்களில் 152 பேருக்கு இதுவரை இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. முதல் நாளான இன்று உடுமலை சாலையில் உள்ள கட்டடங்களை சாலை விரிவாக்கப் பணிக்காக நெடுஞ்சாலை துறையினர் இடிக்கும் பணியை தொடங்கியுள்ளனர்.
மேலும் நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் கூறுகையில் சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடித்து பொள்ளாச்சியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப் படும் என்றனர்.
இதையும் படிக்க: பூனை நடைபோட்ட யானைகள்!