கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் தமிழ்நாடு அரசு 30 கல்குவாரிகளை அமைக்க அனுமதி வழங்கியது. அதன்படி கல்குவாரிகள் அமைக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகின்றனர்.
ஆனால் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் சிலர் அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட கல்குவாரிகளை அமைத்துள்ளனர். அவர்கள் அந்த கல்குவாரிகளில் சட்டத்திற்கு புறம்பாக வெடி வைத்து கனிம வளங்களை எடுத்து கேரளாவுக்கு கடத்தி வருகின்றன்.
இப்படி வெடி வைத்து கனிமங்களை எடுப்பதால் கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் சேதமடைகின்றனர். மேலும் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. குடிநீரிலும் மாசு கலக்கிறது.
இதையடுத்து கோவை புறநகர் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில், நகர பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் முன்னிலையில் வழக்கறிஞர்கள் இதுகுறித்து சார் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் தொல்லை: அதிமுக முன்னாள் எம்எல்ஏ கைது!