கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர் விடுதி இங்கு வால்பாறை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.
இந்த விடுதியில் மாணவர்களுக்கு உணவு சரியாக வழங்கப்படாமல், தரமில்லாத உணவு வழங்கப்படுகிறது என்றும் கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படுவதில்லை எனவும், போதாக்குறைக்கு குடிநீர் பிடிக்கும் பகுதியில் சுத்தம் இல்லாமல் துர்நாற்றம் வீசுவதாகவும் விடுதி மாணவர்கள் புகார் கொடுத்துள்ளனர்.
அதனையடுத்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன் விடுதியில் அதிரடியாக ஆய்வு செய்தார். அப்போது மாணவர்கள், உணவு சரியில்லாததால் சாப்பிட முடியவில்லை என்றும் பத்து நாட்களாக இதே நிலை உள்ளதாகவும் மற்றும் பள்ளிக்குச் செல்ல உரிய நேரத்தில் உணவு வழங்கப் படுவதில்லை குற்றஞ்சாட்டினர்.
ஆய்வைத் தொடர்ந்து சார் ஆட்சியர், வார்டன் முருகேஷ் மீது மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்ததின் பேரில் மாவட்ட ஆட்சியர், முருகேசனை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார். அதற்கு பதிலாக கோட்டூரில் உள்ள கல்லூரி மாணவர்கள் விடுதி வார்டன் சம்பத்குமார் இந்த விடுதிக்கு கூடுதல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்க: ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்: பதற்றத்தில் டெல்லி!